இறுதி சடங்குகளைச் செய்வதற்கான உரிமையும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திலிருந்து பறிக்கப்படுகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14-ஆம் தேதி 19 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அந்தப் பெண்ணின் கழுத்து, முதுகு எலும்புகளை உடைத்து, நாக்கு வெட்டப்பட்ட நிலையில், அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர், டெல்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், மாவட்ட நிர்வாகம் உடலை தகனம் செய்ய அழுத்தம் கொடுத்து, இளம்பெண் உடலை அவரது வீட்டிற்கு கொண்டு செல்ல விடாமல் காவல்துறையினரே அவசர அவசரமாக இறுதி சடங்கை செய்து தகனம் செய்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,இந்தியாவின் மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். உண்மைகள் நசுக்கப்படுகின்றன.இறுதியில், இறுதி சடங்குகளைச் செய்வதற்கான உரிமையும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திலிருந்து பறிக்கப்படுகிறது.இது தவறானது மற்றும் அநியாயமானது என்று தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…