Categories: இந்தியா

10 ரூபாய் கேட்ட ரிக்‌ஷா ஓட்டுநர்…ஆத்திரத்தில் கொடூரமாக தாக்கிய திருநங்கை!

Published by
பால முருகன்

மும்பை : ரிக்‌ஷாவில் சென்றுவிட்டு பணம் செலுத்த மறுத்த திருநங்கை ஒருவரிடம் ரிக்ஷா ஓட்டுநர் 10 ரூபாயை கேட்ட நிலையில், ஆத்திரம் அடைந்த திருநங்கை  கடுமையாக ரிக்‌ஷா ஓட்டுநரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முதலில் திருநங்கை சென்று கொண்டிருந்தபோது ரிக்‌ஷா ஓட்டுநர் பணம் கேட்பது போல தெரிகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் வேகமாக வந்த திருநங்கை ஓட்டுநர் கன்னத்தில் வேகமாக அடித்தார். இதனால் நிலை தடுமாறிய ஓட்டுநர் கீழே விழ சென்றார்.  திருநங்கை அடிக்க ஆரம்பித்ததால் வாக்குவாதம் முற்றியது. எனவே, ஓட்டுனர், தன்னை தற்காத்துக் கொள்ள முயன்று அவரும் தாக்குதலில் ஈடுபட்டார்.

அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் சண்டையை தடுத்து நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் தங்களுடைய போனை வைத்து வீடியோ எடுக்க ஆரம்பித்தனர். சண்டை மிகவும் பெரிதான காரணத்தால் கோபத்தில் அந்த திருநங்கை தனது உடையை கிழித்துக்கொண்டு ஓட்டுனரை கடுமையாக தாக்கினார்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட திருநங்கை ஒரு பெண் என்று சமூக வலைதளங்களில் வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது, ஆனால், அந்தப் பெண் ஒரு திருநங்கை என்று சமூக வலைதளவாசிகள் கருத்துக் கூறி வருகின்றனர். இன்னும் இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பது பற்றிய சரியான விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

முதற்கட்ட தகவலின் படி, இந்த சம்பவம் மும்பையில் நடந்தது மட்டும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் இருவருக்கு என்ன ஆனது என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை . மேலும், இந்த செய்தியையும், வீடியோவையும் freepressjournal என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…

2 hours ago
வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…

3 hours ago
போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

4 hours ago

12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …

5 hours ago

ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…

5 hours ago

கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…

6 hours ago