66 கோடி ரூபாய் சொத்துமதிப்பு.! ஆம் ஆத்மியிடம் தோற்றுப்போன பணக்கார பாஜக வேட்பாளர்கள்.!
டெல்லி உள்ளாட்சி தேர்தலில் பணக்கார பாஜக வேட்பாளர்கள் இரண்டு பேர் ஆம் ஆத்மி வேட்பாளர்களிடம் தோல்வி கண்டுள்ளனர்.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 இடங்களை பிடித்து அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. 15 ஆண்டுகளாக உள்ளாட்சியில் அதிகாரம் செலுத்திய பாஜக இந்த முறை ஆம் ஆத்மியிடம் தோல்வி கண்டுள்ளது.
அதில் இன்னோர் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் டெல்லி உள்ளாட்சி தேர்தலில் இரண்டு பணக்கார பாஜக வேட்பாளர்கள் தோல்வி கண்டுள்ளனர். அதில் முதலாவதாக, வேட்பாளர் பிரமாண பத்திரத்தின் படி 66 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட ராம் தேவ் சர்மா, ஆம் ஆத்மி கட்சியின் முகமது சாதிக்கிடம் தோல்வி கண்டார்.
அதே போல இரண்டாவது பணக்கார பாஜக வேட்பாளராக களமிறங்கிய நந்தினி சர்மாவும் தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.