குடிமைப்பணி முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது யு.பி.எஸ்.சி….

Published by
Kaliraj

குடிமைப்பணி பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து அதற்கான தேர்வை நடத்தி வருகிறது. முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும்.

அந்த வகையில், நடப்பு 2020-ம் ஆண்டுக்கான அறிவிப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 796 காலிப்பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில்,  கடந்த மே மாதம் 31-ஆம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே அக்டோபர் 4-ஆம் தேதி இந்தத்தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 72 நகரங்களில் 2 ஆயிரத்து 569 மையங்களில் சுமார் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினார்கள். இந்நிலையில், அக்டோபர் 4-ம் தேதி நடந்த குடிமைப்பணி முதல்நிலை தேர்வு முடிவுகளை யு.பி.எஸ்.சி. நிர்வாகம் தற்போடு வெளியிட்டுள்ளது. மேலும், முதன்மை தேர்வு ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதல்முறையாக தேர்வு நடைபெற்று 19 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டது தேர்வு எழுதிய மாணவ-மாணவியரிடையே பலத்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்! எங்கிருந்து? எப்போது?

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்! எங்கிருந்து? எப்போது?

தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7)…

1 min ago

கனமழை எதிரொலி : மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து!

கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…

14 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் : ஒருவேளை தோற்றால்?.. டிரம்ப் எடுத்த முடிவு..!

அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…

18 mins ago

தடைகள் தாண்டி ‘கம்பேக்’ கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300…

20 mins ago

47-வது அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் முன்னிலை பெற வாய்ப்பா? டிரம்ப் முன்னிலைக்கு காரணம் என்ன?

வாஷிங்க்டன் : அமெரிக்கவில் 47-வது அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்…

40 mins ago

“பிடிக்கிறதோ இல்லையோ பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பேன்” டிரம்ப் கொடுத்த வாக்குறுதி!

அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குபதிவு நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஆர்கன்சாஸ்,…

48 mins ago