ஏடிஎம் களில் பணம் எடுத்தல் தொடர்பான நான்கு விதிமுறைகள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!
- ஏடிஎம் களில் பணம் எடுத்தல் தொடர்பாக,வாடிக்கையாளர் கட்டணம் உள்ளிட்ட நான்கு விதிமுறைகளை,ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது (ஆர்.பி.ஐ.) ஏ.டி.எம்.மூலமாக பணம் எடுத்தல் தொடர்பான சில முக்கிய மாற்றங்களை வியாழக்கிழமையன்று அறிவித்தது.அதன்படி,இலவச வரம்புக்கு அப்பாற்பட்ட பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபடும்போது சம்மந்தப்பட்ட வங்கிகளால் பணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஏடிஎம் களில் பணம் எடுத்தல் தொடர்பான நான்கு விதிமுறைகள்:
- சொந்த வங்கியில் இருந்து ஐந்து இலவச பரிவர்த்தனைகள்: ஒரு ஏடிஎம் பயனருக்கு,ஐந்து இலவச பரிவர்த்தனைகளானது (பணம் எடுத்தல் அல்லது பிற பணப்பரிவர்த்தனைகள்) அதன் சொந்த வங்கியின் ஏடிஎம் களிலிருந்து எடுக்கும்போது வழங்கப்படுகிறது.
- மற்ற வங்கிகளில் இருந்து மூன்று முதல் ஐந்து வரை இலவச பரிவர்த்தனைகள்: ஒரு மெட்ரோ நகரில் வசிப்பவர்கள்,அங்குள்ள ஏடிஎம் களில் பணம் எடுக்கும்போது ,மூன்று இலவச பரிவர்த்தனைகள் வரை வழங்கப்படுகிறது.மெட்ரோ நகர்களுக்கு வெளியே வாழும் மற்றவர்களுக்கு ஐந்து முறை இலவச பணப்பரிவர்த்தனை வழங்கப்படுகிறது.
- வாடிக்கையாளர் கட்டணம் ரூ. 21 கூடுதல் பரிவர்த்தனைக்கு: அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் உபயோகித்தால்,ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ. 21 வரை வாடிக்கையாளர் சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.
- நிதி மற்றும் நிதி அல்லாத கட்டணம்: வருகின்ற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 2021,நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.15 முதல் ரூ. 17 வரையும்,நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ. 5 முதல் ரூ. 6 வரையும் வாடிக்கையாளர் சேவை கட்டணம் அதிகரிக்கும்.