Congress Prez poll: காங்கிரஸ் கட்சியின் மறுமலர்ச்சி தொடங்கியுள்ளது -சசி தரூர்
இந்திய தேசிய காங்கிரஸின் தலைவிதி கட்சி தொண்டர்களின் கைகளில் உள்ளது.ஆனால் நீங்கள் பாதுகாப்பாக விளையாடினால், நீங்கள் நிச்சயமாக தோல்வியடைவீர்கள்-சசி தரூர்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
திருவனந்தபுரத்தில் வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த சசி தரூர் எந்த முடிவு வந்தாலும் பழைய கட்சியின் மறுமலர்ச்சி தொடங்கியுள்ளது என்றும், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவிதி கட்சி தொண்டர்களின் கைகளில் உள்ளது என்று கூறினார்.
தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஆனால் தனக்கு எதிராக அடுக்கி வைக்கப்பட்டுள்ள முரண்பாடுகளை ஒப்புக்கொண்டதாகவும் தரூர் கூறினார்.காலையில் மல்லிகார்ஜூனிடம் பேசியதையும் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ள தரூர் அடுத்து ஒரு சூசகமான ட்விட்டையும் பதிவிட்டுள்ளார்.
Spoke to Mallikarjun @kharge this morning to wish him well & to reaffirm my respect for him & our shared devotion to the success of @incIndia.
— Shashi Tharoor (@ShashiTharoor) October 17, 2022
இதற்கிடையில் சசி தரூர் செய்துள்ள ட்விட்டில்,”சிலர் தோற்கக்கூடாது என்பதற்காக பாதுகாப்பாக விளையாடுகிறார்கள். ஆனால் நீங்கள் பாதுகாப்பாக விளையாடினால், நீங்கள் நிச்சயமாக தோல்வியடைவீர்கள்.” என்று கூறியுள்ளார்.
“Some people play safe in order not to lose. But if you just play safe, you will definitely lose.” #ThinkTomorrowThinkTharoor
— Shashi Tharoor (@ShashiTharoor) October 17, 2022
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடைகிறது. அக்டோபர் 19ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.