பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிப்பு
சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.4 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார்.
அதேபோல் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜும் கூட்டணி அமைத்துள்ளது .இந்நிலையில் பிரதமருக்கு எதிராக வாரணாசியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் எல்லை பாதுகாப்பு படை முன்னாள் வீரர் தேஜ் பகதூர் யாதவ் போட்டியிடுகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு உணவு குறித்து குறை கூறி வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்பு படை வீரர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் தேஜ் பகதூர் யாதவும் வேட்புமனு தாக்கல் செய்தார்.தற்போது தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.