இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 63% ஆகவும் இறப்பு விகிதம் 2.72% உள்ளது
இந்தியாவில் கொரோனா நோயாளிகள் குணமடைந்தோர் விகிதம் 63% ஆகவும் இறப்பு விகிதம் 2.72% ஆக உள்ளது .
இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 794,842 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21,623 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 495,960 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நோயாளிகள் குணமடைந்தோர் விகிதம் 63% ஆக அதிகரிப்பு மேலும் இறப்பு விகிதம் 2.72% மட்டுமே. வழக்குகளின் எண்ணிக்கை குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. அதிகபட்ச வழக்குகளைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க நாங்கள் சோதனைகளை அதிகரித்து வருகிறோம் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தினமும் 2.7 லட்சம் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வளவு பெரிய நாடாக இருந்தபோதிலும் நாங்கள் கொரோனாவின் சமூக பரவல் கட்டத்தை எட்டவில்லை என தெரிவித்துள்ளார்.