மருத்துவர்களின் சந்தேகத்தால் கேசவலு மனைவியின் உண்மையான வயது வெளியானது .!
- கேசவலு மனைவி ரேணுகாவின் வயது 17 என கூறப்பட்டு வந்த நிலையில் மாவட்ட குழந்தைகள் அதிகாரிகள் ரேணுகாவின் உண்மையான வயது 13 என கூறியுள்ளனர்.
- ரேணுகாவை குழந்தைகள் நல கமிட்டியில் வருகின்ற செவ்வாய் கிழமை ஆஜர்படுத்த உள்ளனர்.
சமீபத்தில் பிரியங்கா ரெட்டி கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது. பிரியங்காவை கொலை செய்த வழக்கில் முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா ஆகிய நான்கு பேரை போலீசாரை கைது செய்தனர்.நான்கு பேரும் போலீசார் தாக்கி விட்டு தப்பிக்க முயன்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
தற்போது இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் குற்றவாளி சின்ன கேசவலுவின் மனைவி பற்றி தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதான சின்ன கேசவலு மனைவி ரேணுகா 7 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
கேசவலு மனைவி ரேணுகாவின் வயது 17 என கூறப்பட்டு வந்த நிலையில் மாவட்ட குழந்தைகள் அதிகாரிகள் ரேணுகாவின் உண்மையான வயது 13 என கூறியுள்ளனர். மருத்துவர்களின் சந்தேகத்தின் பேரில் மாவட்ட குழந்தைகள் அதிகாரிகள் ரேணுகாவின் பிறப்பு சான்றிதழை பார்த்து உள்ளனர்.
அதில் கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தது என தெரியவந்து உள்ளது. ரேணுகாவை குழந்தைகள் நல கமிட்டியில் வருகின்ற செவ்வாய் கிழமை ஆஜர்படுத்த உள்ளோம் என கூறியுள்ளனர்.
இது குறித்து ரேணுகாவின் மாமா கூறுகையில் , எனது மருமகள் மன உளைச்சலில் உள்ளார். கர்ப்பமாக வேறு உள்ளார். அதனால் அவள் எங்களுடன் இருக்க அனுமதி கொடுக்க வேண்டும் எனகேட்டு உள்ளார்.