செல்ஃபி எடுக்க முயன்ற போது இரண்டு இளைஞர்கள் 1,000 அடியுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
இன்றைய இளைஞர்கள் உட்பட பலர் செல்ஃபி என்ற பெயரில் மலையிலும், ரயில் தண்டவாளத்திலும் செய்யும் சாகசத்தால் பல உயிர்கள் பலியாகியுள்ளனர். அந்த வகையில், செல்ஃபி எடுக்க முயன்ற இரு இளைஞர்கள் நேற்று முன்தினம் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தின் தாஹி பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் (25) மற்றும் பண்டி(22). இவர்கள் இருவரும் சுற்றுலா தலமான ராம்கர் கோட்டைக்கு சென்றுள்ளனர்.
அங்கு பெய்த தொடர் மழையால் பனி சூழ்ந்து அப்பகுதி அழகாக இருந்ததை அடுத்து அந்த இரண்டு இளைஞர்களும் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது இருவரும் 1,000 அடியுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசாரால் அப்பகுதியில் பெய்த தொடர் மழை மற்றும் இரவினில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் இளைஞர்களை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனையடுத்து அவர்களது உடல்கள் சடலமாக நேற்று மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்த பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…