முதலிடத்தில் தமிழக பல்கலைக்கழகங்கள்.! மத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் இதோ.!
டெல்லி : பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை முதலிடம் பிடித்துள்ளன.
நாடு முழுவதும் செயல்படும் பல்கலைக்கழகங்கள், மருத்துவ கல்லூரிகள், கல்லூரிகள் என பலவேறு கல்வி அமைப்புகளின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகம் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
கடந்த 2023-2024 கல்வியாண்டில் கல்லூரிகளின் செயல்பாடுகளை கொண்டு தற்போது மத்திய அமைச்சகம் தரவரிசை பட்டியலை வெளியிடுள்ளது. இந்த தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் கல்லூரி , பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அமைச்சகம் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி கல்லூரி தரவரிசைகளை கிழே காணலாம்….
ஒட்டுமொத்தமாக சிறந்த கல்வி நிறுவனங்கள் :
- சென்னை ஐஐடி.
- பெங்களூரு ஐஐடி.
- மும்பை ஐஐடி.
- டெல்லி ஐஐடி.
- கான்பூர் ஐஐடி.
மாநில அளவில் செயல்படும் பல்கலைக்கழகங்கள் :
- அண்ணா பல்கலைகழகம் – சென்னை.
- ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் (Jadavpur University) – கொல்கத்தா.
- சாவித்ரி பாய் பூலே கல்லூரி (Savitri Bai Phule College) – புனே.
8வது இடத்தில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது.
கல்லூரிகள் வாயிலாக தரவரிசை :
- இந்து கல்லூரி – டெல்லி.
- மிராண்டா ஹவுஸ் காலேஜ் – டெல்லி.
- செயின்ட் ஸ்டீபன் கல்லூரி – டெல்லி.
7வது இடத்தில் கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியும், 8வது இடத்தில் சென்னை லயோலா கல்லூரியும் இடம்பெற்றுள்ளன.
மருத்துவக் கல்லூரி தரவரிசை :
- AIIMS மருத்துவ கல்லூரி – டெல்லி.
- PG இன்ஸ்டியூட் மருத்துவ கல்லூரி – சண்டிகர்.
- கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரி – வேலூர்.
- நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெண்டல் ஹெல்த், நியூரோ சயின்ஸ் கல்லூரி – பெங்களூரு.
- ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரி – புதுச்சேரி.
பல் மருத்துவக் கல்லூரி தரவரிசை :
- சவீதா பல் மருத்துவக்கல்லூரி – சென்னை.
- மணிப்பால் பல் மருத்துவ கல்லூரி- மணிப்பால்.
- மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி (Maulana Azad Medical College) – டெல்லி.