நாளை முதல் கேரளாவில் மழை படிப்படியாக குறையும் – இந்திய வானிலை ஆய்வு மையம்
நாளை முதல் கேரளாவில் மழை படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மிக கனமழை பெய்து வரும் நிலையில் நாளை முதல் கேரளாவை மழை படிப்படியாக குறையும் என்று தெரிவித்துள்ளது .வடகிழக்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் கனமழை நீடிக்கும்.
இன்று கேரளாவில் ஓரிரு மிக இடங்களில் கனமழை நீடிக்கும் என்றும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளது .தென்மேற்கு மத்திய அரபி கடலில் 40-50 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது .எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.