மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… போலி மதுபானங்களை கண்டறிய QR கோடு.! பஞ்சாப் அசத்தல் நடவடிக்கை.!

Default Image

போலி மதுபானங்களை கண்டறிய, அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட மதுபானங்களில் QR கோடு ஒன்று பதிக்கப்பட்டு இருக்கும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. 

பஞ்சாப் மாநில அரசு தற்போது சிட்டிசன் செயலி (CITIZEN APP) மூலம் போலி மதுபானங்களை கண்டறியும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட மதுபானங்களில் QR கோடு ஒன்று பதிக்கப்பட்டு இருக்கும்.

அந்த QR  கோடை சிட்டிசன் செயலி மூலம் ஸ்கேன் செய்து பார்த்தல் அதன் உண்மை தன்மை தெரிந்து விடும். இதன் மூலம் பஞ்சாபில் உலவும் போலி மதுபானங்களை கண்டறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 9875961126 என்ற 24X7 ஹெல்ப்லைன் எண்ணையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் போலி மதுபானங்கள் பற்றியும் விவரங்கள் குறித்து புகார் அளிக்கலாம் எனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சிட்டிசன் செயலியை பஞ்சாப் நிதி, திட்டமிடல், கலால் மற்றும் வரித்துறை அமைச்சர் ஹர்பால் சிங் சீமா, மாநில அரசு செயல்படுத்தி வரும் ட்ராக் அண்ட் ட்ரேஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மொபைல் செயலி ஆப், AR  கோட் லேபிள் சரிபார்ப்பு திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்