வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் அரசு தீர்மானம்…
மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுதும் கடும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் பஞ்சாப் அரசு மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மசோதாக்களைத் தாக்கல் செய்ததோடு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது.
நேற்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறும்போது, வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொள்வது விசித்திரமாக உள்ளது என்றார். மேலும் இந்த 3 சட்டங்களும் பஞ்சாப் அரசு மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தொடுக்கும் சட்டப்போராட்டத்தின் அடிப்படையை வழங்கும் என்று குறிப்பிட்டார். மேலும், குறிப்பிட்ட அவர், மத்திய அரசு விவசாயச்சட்டங்களை இயற்றவில்லை மாறாக வாணிபச் சட்டங்களைத்தான் இயற்றியுள்ளது. மேலும் வேளாண்மை என்பது மாநிலங்களுக்குரியது. இந்தச் சட்டங்கள் மாநில உரிமைகள் மீது ஆக்ரமிப்பு செலுத்தி அனைத்தையும் பறிப்பதாகும். அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது என்று பஞ்சாப் அரசு தனது வேளாண் சட்ட வரைவில் தெரிவித்துள்ளது.