புல்வாமா தாக்குதல் ஐநா கண்டனம்…..இந்தியா வரவேற்பு…பீதியில் பாகிஸ்தான்…!!
- காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- புலவாமா தாக்குதலை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வன்மையாக கண்டித்தது வரவேற்கத்தக்கது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஐநா சபையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில் பயங்கரவாதம் ஒருபோதும் சகித்துக்கொள்ளவே முடியாது என்று குறிப்பிட்ட பட்டு தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கு மற்ற நாடுகள், உதவிகளையும் செய்ய வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட்டதை இந்தியா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் டுவிட்டரில் “புலவாமா தாக்குதலை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வன்மையாக கண்டித்தது வரவேற்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.