மதுக்கடைகள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மூடல்-கலால் துறை அறிவிப்பு…!
அனைத்து மதுக்கடைகளையும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று புதுச்சேரி கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றானது தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுபடுத்த அனைத்து மாநிலங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்,புதுச்சேரியில் அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்துவதற்காக சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் பொது முழு ஊரடங்கை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் கொரோனா பரவலின் தாக்கம் குறையாததால்,அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது,அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்று புதுச்சேரி கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில்,பொது ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய தேவைகளான பால்,மீன்,இறைச்சி,மருந்தகம்,காய்கறி கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் போன்றவை இயங்க கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.