எனக்கும் புதுச்சேரி முதலமைச்சருக்கும் இருப்பது அண்ணன் தங்கை சண்டை போன்றதுதான் – ஆளுநர் தமிழிசை
எனக்கும் புதுச்சேரி முதலமைச்சருக்கும் எந்த பிரச்னையும் கிடையாது என தமிழிசை பேட்டி.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ஆளுநரின் அழுத்தம் உள்ளதால் செயல்பட முடியவில்லை என முதலமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், புதுவையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்படுவதால் தான் நடக்கிறது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எனக்கும் புதுச்சேரி முதலமைச்சருக்கும் இருப்பது அண்ணன் தங்கை சண்டை போன்றதுதான். வேறு எந்த பிரச்னையும் கிடையாது என தெரிவித்துள்ளார்.