காதல் சின்னம் தாஜ்மஹாலுக்கு வந்த சிக்கல்.. சொத்துவரி கேட்டு முதல் முறையாக நோட்டீஸ்!

Default Image

காதல் சின்னம் தாஜ்மஹாலுக்கு சொத்துவரி கேட்டு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ். 

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு சொத்துவரி செலுத்துமாறு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பலரும் வியந்து பார்க்கும் கலைநயம் கொண்ட தாஜ்மஹால் புராதன தன்மை கொண்டதால், அதனை மத்திய அரசின் தொல்லியல் துறை நிர்வகித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தாஜ்மஹால் நிர்வாக அதிகாரிகளுக்கு முதல் முறையாக சொத்துவரி கேட்டு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, முதல் முறையாக தாஜ்மஹாலுக்கு ரூ.1.9 கோடி தண்ணீர் வரியாகவும், ரூ.1.5 லட்சத்தை சொத்து வரியாகவும் செலுத்துமாறு ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேஷன், இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) உத்தரவிட்டுள்ளது.

இந்த வரி விதித்து 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுக்கானவை. 15 நாட்களில் வரி பாக்கியை செலுத்தாவிட்டால் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் தாஜ்மஹால் கொண்டுவரப்படும் என ஆக்ரா மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் படேல் கூறுகையில், வரலாற்று சின்னங்களுக்கு சொத்து வரி பொருந்தாது.

மேலும், புல் தரையை பசுமையாக வைத்திருக்கவே தண்ணீரை பயன்படுத்துவதாகவும், வணிக ரீதியாக பயன்படுத்தவில்லை என்பதால் அதற்கும் வரி விதிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். இருப்பினும், தவறுதலாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்