இன்று மாலை 6.30 மணிக்கு JNU வளாகத்தில் உள்ள விவேகானந்தர் சிலையை திறந்துவைக்கிறார் பிரதமர்!
இன்று மாலை 6.30 மணிக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அங்குள்ள மாணவர்களின் உதவியுடன் விவேகானந்தர் அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை இன்று காணொளி கட்சி மூலம் மாலை 6.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்துவைக்க உள்ளார். அதன் பின் காணொளிக்காட்சி மூலமாகவே பிரதமர் மோடி உரையாற்றுவார் எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து கூறியுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள ஆன்மீக தலைவர்களில் ஒருவர், இந்தியாவின் நல்லிணக்கம், வளர்ச்சி, அமைதி மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை கூறி இளைஞர்களை உற்சாகப்படுத்திய விவேகானந்தரின் சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், ஜே.என்.யூ மாணவர்களின் உதவியுடன் தான் இது நிறுவப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.