புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டுமான பணியை நேரில் சென்று ஆய்வு செய்த பிரதமர்…! புகைப்படம் உள்ளே…!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிட பணிகள் குறித்து நேற்று இரவு 8.15 மணியளவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரம், பாராளுமன்ற கட்டிடப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய பாராளுமன்றக் கட்டிடம் ரூ.971 கோடி செலவில் கட்டப்படுகிறது.
இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிட பணிகள் குறித்து நேற்று இரவு 8.15 மணியளவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சுமார் ஒரு மணிநேரம் கட்டுமான பணி குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிடத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி pic.twitter.com/ygNuOF6g48
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 27, 2021