9 கி.மீ நீளமுள்ள லே நெடுஞ்சாலை குகைவழிப்பாதையை பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்!
9 கி.மீ நீளமுள்ள லே நெடுஞ்சாலை குகைவழிப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
இமாச்சல பிரதேசம் மணாலி மலையில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் ரோத்தங் கனவாய் பகுதியில் குகை வழிப்பாதையை குடைந்து தற்போது புதிதாக மலைவழிப்பதை அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒன்பது கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குகை வழி பாதையை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இமாச்சல முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் நேற்று பார்வையிட்டு இருந்தனர்.
இந்நிலையில் இதற்கான திறப்பு விழா ஏற்பாடுகள் நேற்று நடைபெற்று விட்டது. இந்த மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள குகை வழிப் பாதையை பிரதமர் மோடி அவர்கள் இன்று திறந்து வைக்க உள்ளார்.