கொல்கத்தாவில் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2-வது வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் ..!

கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2-வது வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்.
கொல்கத்தாவில் அமைந்துள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2-வது வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. பிரதமரின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.530 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு ரூ.430 கோடியும், மீதி தொகை மாநில அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில், இன்று பிற்பகல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் (சிஎன்சிஐ) இரண்டாவது வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிறுவனம் கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு பகுதிகளில் சுகாதாரத் திறனை அதிகரிக்கும் என்று பிரதமர் முன்பு கூறியிருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025