பாதுகாப்பு குறைவு காரணமாக ஃபெரோஸ்பூர் பேரணியை பிரதமர் மோடி ரத்து செய்தார்.
ஃபெரோஸ்பூரில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருந்தார். இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் இன்று பங்கேற்கவிருந்த தனது நிகழ்ச்சியை பிரதமர் மோடி ரத்து செய்தார். பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்வதற்காக இன்று காலை பிரதமர் பதிண்டாவிற்கு வந்தார். ஆனால் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக பிரதமர் ஹெலிகாப்டர் பயணத்தை தவித்தார்.
இதனால், பிரதமர் சாலை வழியாக தேசிய மரியாள்ஸ் நினைவிடத்திற்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திய பிறகு பிரதமர் சாலை மார்க்கமாக பயணம் செய்தார். அப்போது சாலை மார்க்கமாக பிரதமர் மோடி சென்ற போது ஏராளமான போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் சிக்கியுள்ளது.
பிரதமரின் வருகை, திட்டம் குறித்து பஞ்சாப் அரசிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும், பாதுகாப்பு குறைபாடு குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…