நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை, வாழ்க தமிழ் – கெஜ்ரிவால்

முதல்வர் பழனிசாமியின் நன்றி தெரிவித்ததை தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்தற்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்துள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்தற்காக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்ததை தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு, முதல்வரை ரிட்வீட் செய்துள்ளார். அவரது பதிவில், பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ் என்று தெரிவித்துள்ளார்.
பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ்! https://t.co/7tv0ve8bPE
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 4, 2021