ஒரு டீயின் விலை ரூ.1000..! கல்லா கட்டும் தெரு டீ கடை..!

Default Image

மேற்கு வங்கத்தில் ஒரு டீ கடையில் ஒரு கப் டீ விலை ரூ.1,000-க்கு விற்கப்படுகிறது. இந்த டீ கடை  நட்சத்திர ஹோட்டலில் இல்லை, மேற்கு வங்கத்தில் ஒரு தெரு கடையில்  தான் இவ்வளவு விலைக்கு  டீ விற்கப்படுகிறது.  உங்களுக்கு இப்போது மனத்தில் ஒரு கேள்வி எழும். அப்படி என்ன அந்த டீயில் உள்ளது. ஏன் டீ பிரியர்கள் இவ்வளவு அதிக விலை கொடுத்து டீ கொடுக்க வேண்டும் என்பது தான்.

இந்த டீ கடைக்காரரின் பெயர் பார்த்தபிரதிம் கங்குலி. டீ மீதான அதிக பிரியம் கொண்ட இவர், தனது வேலையை விட்டுவிட்டு ஒரு டீ கடையைத் தொடங்கினார். மேற்கு வங்காளம் முழுவதும் தெருவில் டீ ஸ்டால்கள் ஏராளமாக இருந்தாலும், கங்குலியின் டீ ஸ்டால் படியை விட மேல் தான், காரணம் இந்த  டீ கடையில் சுமார் 115 வகையான டீ  விற்பனை செய்யப்படுகிறது.

இந்த டீ கடையில் ஜப்பானைச் சேர்ந்த சில்வர் ஊசி வெள்ளை தேநீர், ஆப்பிரிக்காவிலிருந்து கேரமல் தேநீர், நைஜீரியாவிலிருந்து ரெட் ஒயின் தேநீர் மற்றும் ஆஸ்திரேலிய லாவெண்டர், சாக்லேட் டீ, வெள்ளை தேநீர், மக்காச்சோளம் தேநீர், ப்ளூ டீ போன்ற பல்வேறு வகையான டீ விற்பனை செய்கிறோம்” என்று கங்குலி கூறுகிறார்.

சில்வர் ஊசி வெள்ளை டீ ஒரு கிலோவின் விலை ரூ .2 லட்சம் 80 ஆயிரம் ஆகும். ஆனால் இந்த ஸ்டாலுக்கு  வாடிக்கையாளர்கள் வருவார்களா..? என கங்குலிடம் கேட்டபோது , எனது கடையை கடந்து செல்லும் 1000 பேரில் 100 பேர் இங்கே டீ குடிப்பார்கள்  எனவும்,  அத்தகைய விலையுயர்ந்த டீக்களை வாங்குவதால் அதிக செலவுகள் ஆகிறது என்று கங்குலி கூறுகிறார்.  மேலும்,  ஒரு கப்  ஜப்பானிய வெள்ளை இலை டீயை ரூ .1000 க்கு விற்கிறேன் என கூறினார்.

இவரது கடைக்கு பலர் ஒவ்வொரு நாளும் நியமிக்கப்பட்ட நேரத்தில் வருகிறார்கள் எனவும், சிலர் முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறார்கள் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்