தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி…!

President Droupati Murmu

இன்று நாடு முழுவதும் 77-வது சுதந்திர தினவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள், 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக நேற்று  ஜனாதிபதி அவர்கள், நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து குடியரசு தலைவரின் ட்விட்டர்  பக்கத்தில், ஜனாதிபதி திரௌபதி முர்மு 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். கடமையின் போது மகத்தான தியாகம் செய்த துணிச்சலான நெஞ்சங்களுக்கு தேசம் தலை வணங்குகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்