நாளை ரயிலில் சொந்த ஊருக்கு செல்லும் குடியரசு தலைவர்…!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் றப்பு ரயில் மூலமாக அவரது சொந்த ஊரான கான்பூர் செல்கிறார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு, நாளை டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலமாக அவரது சொந்த ஊரான கான்பூர் செல்கிறார். குடியரசுத் தலைவரானபின்பு தனது சொந்த கிராமத்துக்கு முதன்முறையாக தனது சொந்த ஊரான, உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருக்கும் தனது சொந்த ஊரான பராங்கிற்கு செக்கிறார்.
குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் அவர்கள், 15 ஆண்டுகளுக்கு பின் ரயில் பயணம் மேற்கொள்கிறார். கடைசியாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் 2006-ஆம் ஆண்டு டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் டேராடூன் சென்று, இந்திய ராணுவ அகாடமியின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.