இந்திய குடியரசு தலைவர் மிலாடி நபி வாழ்த்து… அன்பு மற்றும் சகோதரத்துவத்தை அளித்தவர் நபி என புகழாரம்…
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தற்போது, இஸ்லாமிய பெருமக்களுக்கு மிலாது நபி வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
இது குறித்து வாழ்த்து வெளியிட்டுள்ள அவர், முகமது நபி அவர்களின் பிறந்த நாள் மிலாது நபி என கொண்டாடப்படுகிறது. இந்த தருணத்தில் நாட்டு மக்களுக்கு குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். முகமது நபி அவர்கள், அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை அளித்து உலகத்தை மனித நேயத்தின் பாதையில் கொண்டு சென்றார் என்று தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.