சிறுவன் தலையில் சிக்கிய பானை ..! பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை!

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரவம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஆபிரஹாம் .இவரது மனைவி ஜிஜி. இந்த தம்பதிக்கு மூன்று வயது பியான் என்ற மகன் உள்ளார். இவர் வழக்கம்போல தனது வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் வாசலில் ஈயப்பனைஇருந்து உள்ளது. தவழ்ந்து சென்ற பியான் ஈயப்பனை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் தலையில் அந்த ஈயப்பனை கவிழ்த்து உள்ளான்.பின்னர் அவனால் அந்த பானையை எடுக்கமுடியவில்லை.
இதனால் பியான் அழுகத் தொடங்கி உள்ளார்.அழுகை சத்தம் கேட்டு வந்த ஓடி வந்த தாய் ஜிஜி தனது மகன் தலையில் இருந்த ஈயப்பனை எடுக்க முயற்சி செய்து அவரால் முடியவில்லை. பின்னர் அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் முயற்சி செய்து பார்த்து அவர்களாலும் முடியவில்லை.
தலையில் ஈயப்பனை மாட்டி கொண்டதால் பியான் தொடர்ந்து அழுது உள்ளார். பின்னர் அந்த வழியாக பைக்கில் வந்த அதே பகுதியை சார்ந்த ஒருவரின் பைக்கில் பியானை தீயணைப்பு அலுவலகத்த்திற்கு அழைத்து சென்று உள்ளனர்.அங்கு வீரர்கள் கத்திரியால் கொண்டு ஈயப்பனை வெட்டி எடுத்து பியானை மீட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025