கை அசைத்து நிறுத்த சொன்ன காவலர்…காரை வைத்து இழுத்து சென்ற நபர்!

ஹைதராபாத்தில் கார் சோதனை நடத்தியபோது, சையத் மஜூத்தீன் நசீர் என்ற ஓட்டுனர் காவலரின் உத்தரவை மீறி காரை வேகமாக ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Panjagutta car

ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது. அது என்ன சம்பவம் என்றால், அந்த பகுதியில் ட்ராபிக் காவல்துறையினர் எந்தெந்த வாகனங்களில் கருப்பு நிற ஸ்டிக்கர்ஸ் ஒட்டி இருக்கிறது என்பதைச் சோதனை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது, சையத் மஜூத்தீன் நசீர் என்ற நபர் ஓட்டிய ஒரு கார் அந்த பகுதிக்கு வந்துள்ளது.

அதனைப் பார்த்த காவல் அதிகாரி ஒருவர் காரை நிறுத்து சோதனை செய்யவேண்டும் என்பது போலச் செய்கை காட்டினார். ஆனால், அதனைப் பார்த்துக்கொண்டும் பார்க்காதது போல சையத் மஜூத்தீன் நசீர் காரை நிறுத்தாமல் கொஞ்சம் வேகத்தைக் குறைத்துக்கொண்டு சென்றார். இதனைக் கவனித்த அந்த ட்ராபிக் காவல்துறையினர் காரை நிறுத்த முயற்சி செய்தார். ஆனால், அவரையும் கார் மீது ஏற்றிக்கொண்டு அந்த நபர் வாகனத்தை ஆபத்தான முறையில் சிறிய தூரம் சென்றார்.

இதனால் கடுப்பான அந்த ட்ராபிக் காவல்துறையினர் வாகனத்தை நிறுத்த முயற்சி செய்தபோதிலும் நிறுத்தமுடியவில்லை . இந்த சம்பவத்தில் கீழே அவர் விழுந்து சிறிது காயமும் ஏற்பட்டது. உடனடியாக வாகனத்தை ஒட்டியவரைப் பிடிக்கவேண்டும் என முடிவெடுத்து பணியிலிருந்த போக்குவரத்து துணை ஆய்வாளர் அஞ்சநேயுலு இதுகுறித்து உடனடியாக மற்ற ட்ராபிக் சிக்னலுக்கு கால் செய்து புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், காவல்துறையினர் வாகன எண்ணை வைத்து விசாரணை செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டுனர் சையத் மஜூத்தீன் நசீரை கண்டுபிடித்து, அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டனர். சில மணி நேரங்களில் கார் ஒட்டிய அந்த நபரைக் கைதும் செய்தனர். தற்போது அவரிடம் எதற்காகக் காரை நிற்காமல் ஒட்டி சென்றாய்? எனக் கேள்விகள் எழுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காவலர் தடுத்தும் நிறைக்காமல் காரை ஒட்டி சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ பார்க்கும்போது ஒரு பக்கம் சற்று சிரிப்பலை வந்தாலும் மற்றொரு பக்கம் அவருக்கு இன்னும் அதிகமாகக் காயம் ஏற்பட்டு இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்