ஸ்கூட்டரில் இருந்து விழப் பார்த்த மம்தா பானர்ஜியை உடனடியாக தாங்கிப் பிடித்த காவலர்!
பெட்ரோல் விலையை கண்டிக்கும் வகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணம் செய்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென தவறி விழ பார்த்த பொழுது அருகில் இருந்த பாதுகாவலர் தக்க சமயத்தில் அவரை காப்பாற்றி உள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கொல்கத்தாவின் ஹசாரா மோரிலிருந்து தலைமை செயலகம் வரை சுமார் 5 கிலோமீட்டர் வரையிலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்துள்ளார். இந்த ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைச்சர் ஹக்கீம் அவர்கள் ஓட்டிச் செல்ல பின்னால் அமர்ந்திருந்த மம்தா பானர்ஜி பெட்ரோல் டீசலுக்கு எதிரான பதாகையை கழுத்தில் அணிந்த படி சென்றுள்ளார்.
பின் மக்களிடம் பேசிய அவர், மோடி அரசு இந்தியாவில் மக்களுக்கு எதிரான அனைத்தையும் விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அதன்பின் மம்தா பானர்ஜி அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்ட முயற்சித்த பொழுது திடீரென தவறி விழ, அப்போது அருகில் இருந்த பாதுகாவலர் ஒருவர் சட்டென்று மம்தா பானர்ஜியை கீழே விழாமல் தாங்கிப் பிடித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.