எமன் போல வேஷமிட்டு கொரோனா தடுப்பூசி போட வந்த காவலர் – வைரலாகும் புகைப்படம்!

Default Image

மத்திய பிரதேசத்தில் கடந்த வருடம் மக்களே விழிப்புணர்வு ஆக்குவதற்காக எமதர்மராஜா போல வேடம் அணிந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஜவஹர் சிங் அவர்கள் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு எமன் போன்ற உடையில் வந்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் நிலையில், இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்பொழுது வரையிலும் பல இடங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் தான் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் மக்களை எச்சரித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு செய்வதற்கு முன் களப்பணியாளர்களாக பணியாற்றியது போலீஸ்காரர்கள் தான். வெளியில் வரக் கூடிய மக்களுக்கு கொரோனா போல ஹெல்மெட் அணிந்து வெளியில் அதிகம் செல்லும் பொழுது கொரோனா தொற்றிக் கொள்ளும் என்று விழிப்புணர்வுகளை பல்வேறு விதமாக மக்களுக்கு தெரிவித்து வந்தனர்.

அப்பொழுது எமதர்மராஜா போல வேடமிட்டு மக்களை விழிப்புணர்வு செய்தவர்தான் மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள போலீஸ் கான்ஸ்டபிள் ஜவஹர் சிங். தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், கடந்த வருடம் தான் வேடமிட்டு இருந்த எமதர்மராஜா உடையை அணிந்து வந்து கொரோனா தடுப்பூசி கொண்டுள்ளார். இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து போலீஸ் கான்ஸ்டபிள் ஜவஹர் சிங் அவர்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு முன்னணி தொழிலாளியும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதும் தான் தனது நோக்கம். இந்த செய்தியை பரப்புவதற்காக தான் இவ்வாறு வேடமிட்டு வந்தேன் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்