ஐதராபாத்: கோவலகுண்டாவில் சுமார் 5 மணி நேரமாக தண்ணீரில் மிதந்த சடலமாக மிதந்த மனிதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள ஹனுமகொண்டாவில் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு நீர் நிலையில் ஒரு ஆணின் உடல் 5 மணி நேரமாக மிதப்பதை கண்ட அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர், தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் விரைவாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அங்கு சென்ற இரண்டு கான்ஸ்டபிள்கள், ஆடாமல் அசையாமல் நீர்நிலையில் மிதந்த அந்த நபரை கண்டதும். அங்கிருந்த ஒரு போலீசார் நீர்நிலையில் மிதந்த அந்த நபரின் கையை பிடித்து இழுத்துள்ளார். அப்போது சட்டென தண்ணீரில் மிதந்த அந்த நபர் தலையை திருப்பி பார்த்துள்ளார். இதனால் அதிரிச்சியில் ஆழ்ந்த போலீசார் அவரை கறைக்கு அளித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
பின்னர், அவரை உள்ளூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற விசாரணை நடத்தி உள்ளனர். அதில், அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. மேலும், அந்த நபர் தான் அருகில் உள்ள கிரானைட் குவாரிகளில் தான் வேலை செய்து வருவதாகவும், வெயிலின் வெப்பத்தை தணிக்கவே நீர்நிலையில் இப்படி தஞ்சம் அடைந்ததாகவும் கூறி இருக்கிறார். இது சம்மந்தமான வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…