பாலியல் தொல்லை அளித்த மருத்துவர்.. காரில் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்த போலீசார்.!
சென்னை:பாலியல் தொல்லை அளித்த மருத்துவரை கைது செய்ய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வரை காரிலேயே சென்ற போலீசாரால் பரபரப்பு.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் சதீஷ்குமார் என்பவரை கைது செய்ய, உணர்ச்சிவசப்பட்ட காவல்துறையினர் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் தங்களது போலீஸ் வாகனத்தை ( xuv ) ஓட்டிச் சென்றதால் பரபரப்பானது.
The cops drove their car inside AIIMS Rishikesh.pic.twitter.com/rZDkCvHipM
— Divya Gandotra Tandon (@divya_gandotra) May 22, 2024
இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் 26 வினாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு திரைப்படத்தின் காட்சியை போல் அந்த வீடியோ காட்சியளிக்கிறது. அதில், அவசர சிகிச்சைப் பிரிவில் நெரிசலான இடத்தில போலீஸ் கார் செல்வதைக் காட்டுகிறது. அதற்கு அங்கிருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் நோயாளிகளை வெளியே கொண்டு செல்லும் ஸ்ட்ரெச்சர்களை நகர்த்தி போலீசாரின் கார் வருகைக்கு உதவி செய்வதைக் காணலாம்.
இவ்வாறு, நோயாளிகளின் படுக்கைகளை அப்புறப்படுத்திவிட்டு, போலீசார் வாகனத்தை ஓட்டி சென்ற சம்பவம் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்ய வேண்டியதன் அவசியம் இருந்தாலும், நோயாளிகள் நிறைந்த அவசர வார்டு வழியாக இது மாதிரியான செயலில் ஈடுபடுவதால் நோயாளிகள் பற்றிய கேள்வி எழும் என்ற விமர்சனத்தை பலர் முன் வைக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பு கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் குமார், மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டருக்குள் ஒரு பெண் மருத்துவரை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசார் கைது செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் போரட்டத்தில் ஈடுட்ட நிலையில், சதீஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.