தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்ட காவல்துறை அதிகாரி! எதற்காக தெரியுமா?
தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்ட காவல்துறை அதிகாரி மோஹித் அகர்வால்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி ,வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த மக்களுக்கு பல விதிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி, வீட்டை வெளியே வரும் போது அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கான்பூர் காவல் ஆய்வாளர், மோஹித் அகர்வால் கொரோனா தொடர்பான ஆய்வுக்காக செல்லும் போது, அவசரமாக வாகனத்தில் இருந்து இறங்கு, முக கவசம் அணியாமல், அதிகாரிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தான் முக கவசம் அணியாததை உணர்ந்த காவல் ஆய்வாளர், வாகனத்தில் இருக்கும் மாஸ்க்கை எடுத்து வர சொல்லி, தனது முகத்தில் அணிந்து கொண்டார்.
பின் தனது தவறை உணர்ந்த காவல் அதிகாரி, தான் செய்த தவறுக்காக ரூ.100 அபராதம் காட்டியுள்ளார். அதற்கான ரசீதையும் அவரே நிரப்பியுள்ளார். மக்களுக்கு எடுத்துக்காட்டான முறையில் நடந்து கொண்ட இந்த காவல் அதிகாரியின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதுகுறித்து காவல் அதிகாரி கூறுகையில், நான் மாஸ்க் அணியாததை உணர்ந்த போது, எனக்கு நானே சட்டபடி அபராதம் விதித்து கொண்டேன். இது மக்களுக்கும், மற்ற அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.