உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது.இந்த வைரசால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக இத்தாலி ,ஸ்பெயின் மற்றும் ஈரான் உள்ளது.இந்த வைரஸை தடுக்க உலக நாடுகள் முயற்சி செய்து வருகிறது.
இதையெடுத்து கொரோனா வைரஸ் இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு ,மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் மாநில இடையிலான பேருந்து , உள்ளுர் விமான போக்குவரத்து , ரயில் சேவை போன்றவை நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் கொரோனாவை தடுக்க நாடுமுழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஊரடங்கு உத்தரவு தடையை மீறி வெளியே வருபர்வர்களை போலீசார் அறிவுரை கூறியும் , தடி அடி அடித்தும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேசம் தியோரியாவில் உள்ள மெஹ்தா பூர்வா பகுதியில் ஒரு பெண் சாமியார் தனது வீட்டில் மத நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்த கொண்டனர்.இதையெடுத்து போலீசார் அந்த பெண் சாமியாரிடம் கூட்டத்தை கலைக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் போலீசாரின் பேச்சை கேட்கவில்லை.பின்னர் போலீசார் அங்கு இருந்தவர்களிடம் கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனால் அந்த பெண் சாமியார் வாள் எடுத்து சுழற்றி போலீசாரை மிரட்டி உள்ளார். பின்னர் போலீசார் அந்த பெண் சாமியாரையும் , அங்கு இருந்தவர்கள் மீதும் தடியடி நடத்தினர். பிறகு போலீசார் பெண் சாமியாரையும் , சிலரையும் கைது செய்து உள்ளனர்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…