பிரதமர் ஒரு கோழை , அவர் நாட்டுக்கு பதிலளிக்க வேண்டும் – ராகுல் காந்தி

பிரதமர் மோடி இந்தியாவிற்கு சொந்தமான இடங்களை சீனாவிடம் கொடுத்துவிட்டார் என்று ராகுல் காந்தி கேள்வி தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்ற அவைகளில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை’ குறித்து விளக்கம் அளித்தார்.அவர் அளித்த விளக்கத்தில்,எல்லையில் பதற்றத்தை தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒரு இன்ச் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம்.லடாக் எல்லையில் எந்த சோதனை ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயார் என்று பேசினார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் . அப்பொழுது அவர் பேசுகையில், கிழக்கு லடாக்கின் நிலைமை குறித்து நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை வெளியிட்டார்.பிரதமர் மோடி இந்தியாவிற்கு சொந்தமான இடங்களை சீனாவிடம் கொடுத்துவிட்டார். சீனா நுழைந்த இடத்திலிருந்து மிக முக்கியமான பகுதியான டெப்சாங் சமவெளி குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உண்மை என்னவென்றால், பிரதமர் இந்தியப் பகுதியை சீனாவுக்குக் கொடுத்திருக்கிறார்.அவர் நாட்டுக்கு பதிலளிக்க வேண்டும்.
பிரதமர் ஒரு கோழை, அவரால் சீனாவிற்கு எதிராக நிற்க முடியாது. அவர் எங்கள் இராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கிறார்.இந்தியாவில் இதை செய்ய யாரும் அனுமதிக்கக்கூடாது.இந்த நாட்டில் உள்ள எல்லைகளை பாதுகாப்பது பிரதமரின் பொறுப்பாகும்.அவர் அதை எப்படி செய்வது என்பது அவருடைய பிரச்சினை, என்னுடையது அல்ல என்று பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
தமிழ் விழித்தது., தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது – மு.க.ஸ்டாலின் பதிவு
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025