3 பொய்கள் குறித்து பிரதமர் மோடி கருத்து கூறுவாரா? – ப.சிதம்பரம் கேள்வி!

Default Image

புதிய வேளாண் சட்டத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பரப்புரை செய்வதாக கூறும் பிரதமர், பொய் என்று சொல்லப்படும் 3 விஷயங்கள் குறித்து கருத்து கூறுவாரா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இதுவரை மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் பலனளிக்கவில்லை. இந்தநிலையில் பிரதமர் மோடி நேற்று மத்திய பிரதேச மாநில விவசாயிகளுடன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்பொழுது பேசிய அவர், வேளாண் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டிய அவர், சீா்திருத்தங்களை மோடி கொண்டு வந்தது எதிா்க்கட்சிகளுக்குப் பிரச்னையாக உள்ளதாகவும், அதற்கான நற்பெயரை தனக்கு கொடுக்க வேண்டாம் என உரையாற்றினார். மேலும் பேசிய அவர், விவசாயிகளை தவறாக வழிநடத்துவதை தவறாக வழிநடத்துவதை எதிா்க்கட்சியினா் நிறுத்த வேண்டும் என்று அந்த உரையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், புதிய வேளாண் சட்டத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பரப்புரை செய்வதாக கூறும் பிரதமர் மோடி, பொய் என்று சொல்லப்படும் 3 விஷயங்கள் குறித்து கருத்து கூறுவாரா? என கேள்வி யெழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பக்கத்தில், விவசாயிகளின் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் குழுவினர், குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,870 என்றாலும் ஒரு குவிண்டால் நெல் ரூ.900-க்கு விற்கப்படுகிறது என்கின்றனரே அது பொய்யா? எனவும் கேள்வியெழுப்பினார்.

அதுமட்டுமின்றி, ஹத்ராஸ் பாலியல் வழக்கில், உயிரிழந்த பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என அம்மாநில காவல் துறை கூறிய நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை சிபிஐ உறுதிசெய்து குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது. இது பொய்யா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்