அவசரமாக தரையிறக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சென்ற விமானம்.!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே சென்ற விமானம் அவசரமாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத் செல்லவிருந்த நிலையில், திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. நேற்று புறப்படும் போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டுபிக்கப்பட்டதால் உடனடியாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து கொல்கத்தா விமான நிலைய இயக்குனர் கூறுகையில், கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக விமானம் உடனே தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர நிலைய அடைந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விமானத்தில் இருந்தார் என்றும் இன்று அவர் ஹைதராபத் செல்லவுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.