விமான நிலையத்தில் பயணிகளை தவற விட்ட விமானம்..! அபராதம் விதித்த டிஜிசிஏ..!
பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளை தவறவிட்டு சென்ற கோ பர்ஸ்ட் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் விமானநிலையத்தில் 55 பயணிகளை தவறவிட்டு சென்ற கோ பர்ஸ்ட் விமான நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 9 ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கோ பர்ஸ்ட் பயணிகளை விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
கவனக்குறைவான மேற்பார்வையால் நடந்த சம்பவத்திற்கு விமான நிறுவனம் மன்னிப்புக் கேட்டது. பயணிகள் அனைவரையும் மாற்று விமானத்தில் அவர்களது இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமான நிறுவனம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இலவச டிக்கெட்டையும் அறிவித்துள்ளது. அடுத்த 12 மாதங்களில் அனைத்து பாதிக்கப்பட்ட பயணிகளுக்கும் எந்தவொரு உள்நாட்டுத் துறையிலும் பயணம் செய்ய ஒரு இலவச டிக்கெட்டை வழங்க விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.