ஓடும் பேருந்தில் நடிகையை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்..!
கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடித்து வருகிறார். இவர் காசர்கோட்டில் நடக்கும் மாநில அளவிலான பள்ளி கலை விழாவிற்கு கலந்து கொள்ளவதற்காக நேற்று முன்தினம் இரவு கொல்லத்தில் இருந்து ஒரு தனியார் ஸ்லீப்பர் கோச் பேருந்தில் சென்று உள்ளார்.
நேற்று அதிகாலை 2 மணி அளவில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது அவருக்கு அருகில் இருந்த ஒரு வாலிபர் இவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அலறி அடித்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் பேருந்தில் இருந்த சகப் பயணிகள் அவரிடம் விசாரித்தபோது நடந்ததைக் கூறினார்.
சம்பவத்தின் போது பேருந்து மலப்புரம் அருகே உள்ள கோட்டுக்கல் என்ற இடத்தில் சென்றுகொண்டு இருந்தது. உடனே கோட்டுக்கல் காவல் நிலையத்திற்கு பேருந்தை கொண்டு செல்லப்பட்டு அந்த வாலிபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் காசர்கோட்டையை சேர்ந்த முனவர் என்பது தெரியவந்தது.பின்னர் அந்த வாலிபரை கைது செய்தனர்.