பிரம்மாண்டத்தின் உச்சம்., அயோத்தில் புதிதாக கட்டப்படும் மசூதியின் மாதிரி படம்.!
அயோத்தியில் புதியதாக கட்டப்பட உள்ள பாபர் மசூதியின் மாதிரி புகைப்படத்தை இந்திய இஸ்லாமிய கலச்சார அமைப்பு வெளியிட்டுள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லாவுக்கு வழங்கி உத்தரவிட்டது. அத்துடன், முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து தான்னிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் புதிய மசூதி கட்டுவதற்காக வழங்கப்பட்டது.
உத்தரபிரதேச மாநில சன்னி வக்பு வாரியம் அமைத்துள்ள அறக்கட்டளை புதிய மசூதியை கட்ட இருக்கிறது. இதற்கு அடுத்த ஜனவரி மாதம் 26-ம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளனர். ஒரே நேரத்தில் 2,000 பேர் தொழுகை நடத்தும் அளவில் மிக பிரமாண்டமாக கட்டப்படவுள்ளது. இந்த நிலையில், புதியதாக கட்டப்பட உள்ள பாபர் மசூதியின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இந்திய இஸ்லாமிய கலச்சார அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் மிக பிரமாண்டமாக உள்ளது. புதிதாக கட்டப்படும் மசூதியின் பின்பகுதியில் மருத்துவமனை இடம்பெறும் வகையில் மாதிரி படம் வெளியாகி உள்ளது.