பெண் தோழியை காக்பிட்டுக்குள் அழைத்துவந்த விமானி..! ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்..!
பெண் தோழியை விமானத்தின் காக்பிட்டுக்குள் அழைத்துவந்த விவாகரத்தில் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விமானி ஒருவர் தனது பெண் நண்பரை டிஜிசிஏ விதிகளை மீறி, அனுமதியில்லாமல் விமானத்தின் கட்டுபாட்டு அறைக்குள் (காக்பிட்) அழைத்துவந்துள்ளார். இந்த சம்பவம் பிப்ரவரி 27ம் தேதி துபாயில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் நடந்துள்ளது.
மேலும், நண்பரை விமானத்தின் கட்டுபாட்டு அறைக்குள் அனுமதியில்லாமல் அழைத்துவந்தது, பாதுகாப்பு விதிமுறை மீறல் என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிசிஏ தெரிவித்திருந்தது.
மேலும், இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா எந்தவித உடனடி தீர்வும் காணவில்லை. இந்நிலையில், ஒழுங்குமுறைகள். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை உடனடியாகவும் திறம்படவும் தீர்க்காததற்காக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.