ஊழலை அமபலப்படுத்தியதால் 7 முறை சுடப்பட்ட அதிகாரி UPSC தேர்வில் வெற்றி

Default Image

லக்னோ: ஊழல் வழக்கை அம்பலப்படுத்தியதால் ஏழு முறை சுடப்பட்ட அதிகாரி ஒருவர் சிவில் சர்வீசஸ்  தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த மாகாண சிவில் சர்வீஸ் அதிகாரி ரின்கூ ரஹீ.2008ல், முசாபர்நகரில் உதவித்தொகை வழங்குவதில் 83 கோடி ஊழல் நடந்துள்ளது,இதை  முறியடிப்பதில் பெரும் பங்கு வகித்தார்.இவர் மாநில சமூக நலத்துறையில் அதிகாரியாக உள்ளார்.

இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்ததால் அவர் தாக்கப்பட்டு ஏழு முறை சுடப்பட்டார்.இந்த தாக்குதலில் அவர் முகத்திலும் சுடப்பட்டது; அவரது முகம் சிதைந்து, அவர் பார்வை மற்றும் செவிப்புலன் இழந்தார்.

ரின்கூ அரசு நடத்தும் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இயக்குனராகவும் பல ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் ஆர்வலர்களுக்கு கற்பித்துள்ளார்.இந்த சம்பவம் நடந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிங்கு சிங் ரஹீ யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேர்வில் தேர்ச்சி பெற்று 683வது ரேங்க் பெற்றுள்ளார்.

இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் “எனது மாணவர்கள் என்னிடம் UPSC தேர்வை எழுதச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் தூண்டுதலால்தான் நான் அதைச் செய்தேன்” என்றார்.

“இதற்கு முன், 2004 இல், நான் மாகாண சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்,” படிப்பிற்காக நேரத்தை ஒதுக்குவது கடினமாக இருப்பதாக அவர் கூறினார், ஆனால் அவர் உறுதியாக இருந்துள்ளார்.

“என்னைப் பொறுத்தவரை, பொது நலன் முக்கியம். சுயநலத்திற்கும் பொது நலனுக்கும் இடையே எப்போதாவது மோதல் ஏற்பட்டால், நான் பொது நலனைத் தேர்ந்தெடுப்பேன்” என்று ரின்கூ ரஹீ பகிர்ந்து கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்