புதைப்பதற்கு முன் உயிர் பிழைத்த நபர்!திடுக்கிடும் தகவல்!

Default Image

உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ என்ற பகுதியில் பர்கான் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவருக்கு ஜூன் 21-ம் தேதி சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.அங்குள்ள நபர்கள் பர்கானை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதை கேட்ட அவரது குடும்பத்தினர் மன வருத்தத்துடன் அவரை கல்லறையில் அடக்கம் செய்ய சென்றுள்ளனர்.

அப்போது கல்லறையை அடைந்தவர்கள் அவரின் உடம்பு அசைவதை கண்டுள்ளனர்.பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அப்போது பார்கானின் உடம்பில் உயிர் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

மேலும் சுமார் 7 லச்சக்கத்திற்கும் அதிகமான பணத்தை செலவு செய்து பார்கானின் உயிரை காப்பாற்றி வருவதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.அவரின் உடம்பில் ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும் மூளை செயல்பாட்டில் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கல்லறையில் புதைக்க சென்றவர் உயிர் பிழைத்த சம்பவம் அங்குள்ளவர்களிடையே ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Earthquake in Myanmar
Academy Awards 2025
bussy anand
Tungsten madurai
mk stalin
annamalai