ரெயின் கோட் என நினைத்து பிபிஇ கிட்-ஐ திருடிய நபர்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

ரெயின் கோட் என நினைத்து பிபிஇ கிட்-ஐ திருடிய நபர்.
நாக்பூரில் காய்கறி வியாபாரம் செய்து வரும் ஒருவர், குடித்து விட்டு வடிகாலில் விழுந்து காயமடைந்துள்ளார். இவர் ஆரம்ப சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் நாக்பூரின் மாயோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், இவர் மருத்துவமனையில் இருந்து ரெயின் கோட் என நினைத்து, பிபிஇ கிட்-ஐ திருடியுள்ளார். இதனையடுத்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன இவர், பிபிஇ கிட்-ஐ தனது நண்பர்களிடம் காண்பித்து, இது ரெயின் கோட் என்றும், இதனை ரூ.1,000-க்கு வாங்கினேன் என்றும் கூறியுள்ளார்.
இது ரெயின்கோட் அல்ல, பிபிஇ கிட் என்பதை கவனித்த மக்கள் , அப்பகுதியின் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, அவரிடம் இருந்து பிபிஇ கிட்-ஐ பறிமுதல் செய்து எரித்தனர்.
அதன்பின், அந்த நபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், முடிவுகள் நேர்மறையாக வந்தது. பின் அவரது, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் சோதனை செய்தனர். அவர்களுக்கு மேற்கொண்ட சோதனையில் முடிவுகள் எதிர்மறையாக தான் வந்ததாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!
March 18, 2025
விண்ணிலிருந்து புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்.! பிரிந்து சென்றது க்ரூ டிராகன் விண்கலம்!
March 18, 2025