ஒரே ஒரு போன் காலால் ரூ.9 லட்சத்தை இழந்த நபர்!

Default Image

ஒரே ஒரு போன் காலால் ரூ.9 லட்சத்தை இழந்த நபர்.

இன்று படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை அனைவருமே ஆன்லைனில் உலா வருகின்றனர். இணையத்தை பயன்படுத்தும், படிப்பறிவு இல்லாத சிலர், மோசடி கும்பாலின் வலையில் சிக்கி விடுகின்றனர். இதனால், அவர்கள் பல வகையில் ஏமாற்றப்படுகின்றனர்.

அந்த வகையில், நாக்பூரில் வசித்து வரும் அசோக் மேன்வெட் என்பவற்றின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை அசோக்கின் 15 வயது மகன் எடுத்து பேசியுள்ளார். அவரிடம் பேசிய நபர் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இருந்து பேசுவதாகவும், உங்கள் அப்பாவின் தொலைபேசியில் தான் சொல்லும் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறும் கூறியுள்ளார்.

அந்த 15 வயது சிறுவனும், எதிர்முனையில் பேசிய நபர் கூறியவாறே செய்துள்ளார். அந்த நபர் கூறிய செயலியானது, வேறொரு இடத்தில் இருந்து செல்போனை இயக்கும் ரிமோட் செயலி ஆகும். இந்த செயலியை அச்சிறுவன் அவனது செல்லில் பதிவிறக்கம் செய்தவுடன், செல்போனுடன் இணைக்கப்பட்டிருந்த வங்கி கணக்கில் இருந்து ரூ.9 லட்சத்தை அந்த நபர் கொள்ளையடித்துள்ளார்.

இதனையடுத்து, அசோக் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மோசடி செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்