பெங்களூருவில் ஆன்லைனில் பாதி விலையில் ஐபேட் வாங்க வேண்டுமென்று நினைத்து மோசடி கும்பலிடம் 19 லட்சத்தை இழந்த மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தற்போதைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து அமர்ந்த இடத்திலிருந்தே பெற்று கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்து விட்டதால்,எந்த விலையுயர்ந்த பொருளாக இருந்தாலும் ஆன்லைனில் பணத்தை அனுப்பி வீட்டுக்கு டெலிவரி செய்யும் படியாக வாங்கி கொள்கின்றனர். இது சிலருக்கு சவுகரியமாக இருப்பது போல ஆன்லைன் மோசடி கும்பலுக்கும் மிக சவுகரியமாக போய்விட்டது.
பெங்களூருவில் உள்ள மருத்துவர் ஒருவர் ஐபேட் வாங்க ஆசைப்பட்டுள்ளார். அவர் ஆசைப்பட்ட ஐபேட் புதியதாக இந்தியாவில் வாங்கினால் 80,000 செலவாகும். ஆனால், ஆன்லைனில் அதே ஐபேட் 45,000 துபாயிலிருந்து கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்து குயிக்கரில் ஆர்டர் செய்துள்ளாதாக கூறப்படுகிறது. ஆனால், ஐபேட் வரவில்லை, மாறாக சில வரிகள் உள்ளது என காரணம் காட்டி மேலும் பணம் பெறப்பட்டுள்ளது. மீண்டும், அவருக்கு குறைந்த விலையில் 5 ஐபேட் மற்றும் 5 கடிகாரங்கள், 2 மடிக்கணினி வழங்கப்படும் என கூறப்பட்டதை அடுத்து, ஆசையில் மருத்துவர் மறுபடியும் அதே ஆன்லைன் பக்கத்தில் 19.2 லட்சத்தை அனுப்பி மொத்தமாக வாங்குவோம் என நினைத்துள்ளார்.
ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட மோசடி கும்பல் அதன் பின் எந்த பதிலும் அளிக்கவில்லை, பொருளும் அனுப்பப்படவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் பெங்களூர் மாகதி சாலை போலீசில் புகார் அளித்துள்ளார், போலீசார் இந்த ஆன்லைன் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது தவறல்ல, அதிகம் ஆசைப்பட்டு குறைந்த விலையில் நிறைவான பொருள் கிடைக்கும் என நம்புவது தான் தவறு. இது போன்ற ஆன்லைன் மோசடி கும்பல் பெருகி வருவதால் கவனமுடன் செயல்படுவது நமது கடமை.
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…
சிட்னி : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில்…
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…