அரை விலையில் ஐபேட் வாங்க நினைத்து ஆன்லைனில் 19 லட்சத்தை இழந்த மருத்துவர்!

Default Image

பெங்களூருவில் ஆன்லைனில் பாதி விலையில் ஐபேட் வாங்க வேண்டுமென்று நினைத்து மோசடி கும்பலிடம் 19 லட்சத்தை இழந்த மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

தற்போதைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து அமர்ந்த இடத்திலிருந்தே பெற்று கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்து  விட்டதால்,எந்த விலையுயர்ந்த பொருளாக இருந்தாலும் ஆன்லைனில் பணத்தை அனுப்பி வீட்டுக்கு டெலிவரி செய்யும் படியாக வாங்கி கொள்கின்றனர். இது சிலருக்கு சவுகரியமாக இருப்பது போல ஆன்லைன் மோசடி கும்பலுக்கும் மிக சவுகரியமாக போய்விட்டது.

பெங்களூருவில் உள்ள மருத்துவர் ஒருவர் ஐபேட் வாங்க ஆசைப்பட்டுள்ளார். அவர் ஆசைப்பட்ட ஐபேட் புதியதாக இந்தியாவில் வாங்கினால் 80,000 செலவாகும். ஆனால், ஆன்லைனில் அதே ஐபேட் 45,000 துபாயிலிருந்து கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்து குயிக்கரில் ஆர்டர் செய்துள்ளாதாக கூறப்படுகிறது. ஆனால், ஐபேட் வரவில்லை, மாறாக சில வரிகள் உள்ளது என காரணம் காட்டி மேலும் பணம் பெறப்பட்டுள்ளது. மீண்டும், அவருக்கு குறைந்த விலையில் 5 ஐபேட் மற்றும் 5 கடிகாரங்கள், 2 மடிக்கணினி வழங்கப்படும் என கூறப்பட்டதை அடுத்து, ஆசையில் மருத்துவர் மறுபடியும் அதே ஆன்லைன் பக்கத்தில் 19.2 லட்சத்தை அனுப்பி மொத்தமாக வாங்குவோம் என நினைத்துள்ளார்.

ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட மோசடி கும்பல் அதன் பின் எந்த பதிலும் அளிக்கவில்லை, பொருளும் அனுப்பப்படவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் பெங்களூர் மாகதி சாலை போலீசில் புகார் அளித்துள்ளார், போலீசார் இந்த ஆன்லைன் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது தவறல்ல, அதிகம் ஆசைப்பட்டு குறைந்த விலையில் நிறைவான பொருள் கிடைக்கும் என நம்புவது தான் தவறு. இது போன்ற ஆன்லைன் மோசடி கும்பல் பெருகி வருவதால் கவனமுடன் செயல்படுவது நமது கடமை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்