55 வயதான நபர் ஒருவர் ஆன்லைனி பீர் ஆர்டர் செய்ததன் மூலம், அவரது வங்கி கணக்கில் இருந்து, ரூ.1.50 லட்சம் திருடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை அடுத்து பல இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இணையத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர். அந்த வகையில், புனேயில் 55 வயதான நபர் ஒருவர் ஆன்லைனில் பீர் ஆர்டர் செய்ததன் மூலம், அவரது வங்கி கணக்கில் இருந்து, ரூ.1.50 லட்சம் திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புனே காவல்துறையின் சைபர் செல் காவல்துறை துணை ஆய்வாளர் ரவீந்திர காவரி கூறுகையில், ‘ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் திறக்கப்படாத காரணத்தினால், புனேயில், 55 வயதான நபர் ஒருவர், ஆன்லைனில் பீர் வாங்குவதற்கான தேடலின் போது ஒரு எண்ணை கண்டுபிடித்துள்ளார். பின் அந்த எண்ணை தொடர்பு கொண்டு அவரை அழைத்தபோது, அவரை ரூ.10 செலுத்தும்படி கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து அவர் ரூ.10 அனுப்பியுள்ளார்.
பின் ஒரு லிங்கை அனுப்பி, அந்த செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவர் சற்றும் சந்தேகப்படாமல், அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். இதன் மூலம் ஆன்லைனில் பீர் ஆர்டர் செய்தவரின் ஸ்மார்ட்போனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து பீர் ஆர்டர் செய்தவரின், வங்கி தொடர்பான சான்றுகள் மற்றும் கடவுச்சொற்கள் ஆகியவற்றை பெற்றுக் கொண்டு, அந்த நபரின் கணக்கில் இருந்து 1.50 லட்சத்தையும் திருடி உள்ளார். இதனையடுத்து புகார்தாரர் உடனடியாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி நண்பர்களில் ஒருவரை அழைத்து நடந்ததை கூறியுள்ளார்.
பணத்தை இழந்த நபர் புகாரளிக்க காவல் நிலையத்திற்கு வந்தார். நாங்கள் உடனடியாக பரிவர்த்தனை செய்யப்பட்ட செய்தியை சரிபார்த்து விட்டு, ஈ-காமர்ஸ் நிறுவனத்தின் குறிப்பை கண்டுபிடித்தோம். பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் ‘ஸ்டாப் பேங்கிங் மோசடி’ என்ற குழுவை அணுகி, சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வோம். இதன் மூலம், அவர்கள் மோசடி செய்பவர்களின் வங்கி கணக்கிற்கு பணம் செல்வதை தடுத்து நிறுத்துவர் என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த குழுவின் மூலம் பீர் ஆர்டர் செய்தவரிடம் மோசடி செய்யப்பட்ட பணம், மோசடி செய்தவரின் வங்கி கணக்கிற்கு செல்லாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பீர் ஆர்டர் செய்தவரின் கணக்கில் பணத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் ஒரு வாரத்தில் அந்த நிதி அவரது வங்கி கணக்கிற்கு திருப்பித் தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…